Monday, 22 May 2017

கலிஃபா உமர்


சாத்தானின் முதுகில் 
சாட்டையடிகள், 
எங்கள் கலிஃபா உமர்
கிழிந்த ஆடைகளோடு 
நடந்து போகிறார், 
அரசவையென்பது
மண் குடிலில் நடக்கிறது, 
கலிஃபாவின் அதிகாரம், 
துஷ்டர்களிடம் மட்டும்தான்,  
ஆள்கிறவன் 
ஆண்டவன் இல்லை, 
ஆடையில்லாதவர்களின் 
சொந்தக்காரன் என்கிறார், 
ஏழைகளைக் கண்டால் 
அஞ்சி நடுங்குகிறார்,
"அல்லாஹ் 
என்னை மன்னித்துவிடு,
என் ஆட்சி சரியில்லை!" 
இதே  இலக்கணம் 
இன்றும்தான் இருக்கிறது! 
விதிகள் மட்டுமே 
மீறிப் பயணிக்கின்றன !

- மு.முகமது பாட்சா 

No comments:

Post a Comment

Popular Posts