ஏகலைவனின்
விரல் பறிப்பில்
சத்திரியம்
சம்மனம் போட்டு
அமர்ந்திருந்தது!
வித்தைக் காரனுக்கு
கட்டை விரல்
செத்துப் போனாலும்
மற்ற விரல்கள்
நண்பர்கள்தான்!
மான்களை
மாய்ப்பவன் என்றாலும்
மனிதர்களை
நேசிப்பவன்!
ஏகலைவனின்
விரல்கள்தான்...
கண்ணனின்
இறுதிச் சுற்றை
முடித்து வைத்தது!
புரையோடிப் போனது
தந்திரக்காரரின்
விரல் மட்டுமல்ல
முன் செய்த
சூழ்ச்சிகளும் தான்!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment