Saturday, 6 May 2017

தீராத தாகம்

உறங்காத விழிகளுக்குள் 
நுழைந்தவள் 
அடர்ந்த இருட்டை 
முகத்தில் போர்த்துகிறாள் 
விடத்தை இதழில் செலுத்தி 
கடத்திப் போனவள் 
கிடத்திய இடம் 
பாலையா , கடலாயென்று 
தெரியாதோர் மாயை 

desert arabian dream lovers painting க்கான பட முடிவு
ஒட்டகங்களெல்லாம் 
கடலின் மீது நடக்க 
மீன்களெல்லாம் பாலையின் 
மணலில் நீந்துகின்றன 
என் மீது 
ஒரு பேரீட்சை மரம் அமர்ந்திருக்க 
நான் வேராய் மாறி 
நீரை அருந்துகிறேன் 
அவள் என்னையும் பருகி 
தாகம் தவிக்கிறாள் 
வெட்பம் நிழலைத் தேட 
நானும் அவளும் தனியாகக் கிடக்கிறோம் 
தாகம் தீர்க்கவியலாத கடல் 
பாலை முழுவதும் பரவி விரவியும் 
ஒட்டகங்கள் 
கடலின் மீது நடந்து போகின்றன. 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts