வசீகரனின் ஆடுகள்
மந்தையை விட்டுபிரிந்து சென்று விட்டன...
மேய்ப்பனில்லாத ஆடுகளுக்கு
மேய்ச்சலிலொன்றும்
குறைவில்லை...
பாட்டுகள் பாடின
ஆட்டங்கள் போட்டன
சினிமாவிற்குச் சென்று
சீட்டிகையடித்தன...
அவற்றை யாரும்
ஆடுகளென்றே சொல்லவில்லை
இரத்தப் பார்வையொன்று
சுற்றி வருவதை
எள்ளி நகைத்தன
மேய்ப்பனைச் சபித்தன
வசீகரன் தேடி கண்ட போது
மேய்ப்பன் இல்லாத ஆடுகளாகவே
இறந்தும் கிடந்தன !
No comments:
Post a Comment