தொலையும் முன்பே
எமக்குத் தெரிந்திருந்தது
தொலைந்து போவோமென்று...
ஈட்டிகளை
நீங்களே தீட்டிக் கொடுத்தபோது!
இன்னமும்; நாங்கள்
எங்களைத்தான்
தேடிக் கொண்டேயிருக்கிறோம்!
பார்த்தீர்களா?
எங்கள் தேசத்து புத்தரின் வாயில்...
கோரைப் பற்களுக்கு பதிலாக
சிங்கப்பற்கள் முளைத்திருப்பதை !
கொல்லுதல் பாவமென்றுதான்
புத்தனின் சித்தனானான்
கலிங்கத்தின் அசோகன்!
கொலைகளும் நியாயமென்றே
தன்னை மாற்றிக் கொண்டான்
இலங்கையின் புத்தன்!
எங்கள் தேசமே..
வரலாற்றுக் குறிப்பிலாவது
எங்களை மிச்சம் வையுங்கள்..
இலங்கை மண்ணில்
அழிந்ததொரு இனமென்று
துரோகத்தின் வரலாற்றில்
அழியாமல் எழுதியிருக்கட்டும் .
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment