Friday, 19 May 2017

பசிக்கிறது...

கதவுகளை 
அறைந்து சாத்திவிடுங்கள் 
கண்களைக் கூசுகின்றது, 

புத்தகமாய்த் திறந்து கிடக்கிறேன் 
வாசிப்பைத் தொடங்கலாம், 
புத்தகங்கள் 
எப்போதும் யாரையும் வாசிப்பதில்லை 

மௌனத்தைத் தின்ற வயல் நான் 
சலசலப்பு 
மேயும் ஆடுகளிடம் மட்டும்தான், 

prostitute morden painting க்கான பட முடிவு

கனவுகளையும் 
ஆடைகளோடு கழற்றி வைத்துவிட்டேன் 
கவிதையெழுதுபவர்கள் 
என் தேகத்திலெழுதிக் கொள்ளலாம், 

இரவுகளை 
எனக்குப் பகலாக்கி விடாதீர்கள்... 
இரவுகள் இரவுகளாகவே இருக்கட்டும். 
பகலில் நான் 
எப்போதுமே விழித்திருப்பதில்லை. 

முடியாத இந்தக் கவிதையை 
யாரும் முடித்து வைக்க வேண்டாம், 
பாழும் வயிறு பசிக்கத்தான் செய்கிறது ! 

- முகமதுபாட்சா

No comments:

Post a Comment

Popular Posts