எட்டாவது நரகத்தில்
அவன் உட்கார்ந்திருக்கிறான்,
அவளோ, மூன்றாம் சாமத்தை
கட்டிப் பிடித்துக் கொண்டு
உறங்குகிறாள் !

முள் படுக்கையில்
முட்டிக்கால் போட்டு உட்கார்ந்திருப்பது
கொடுமையானது,
மௌனம் வெற்றிடத்தை விரித்து
விழிகளால் சுற்றிப் பார்க்கிறது,
கண்களைக் கழற்றி
அவளருகினில் வைத்துவிட்டு
அவன் மட்டும் வெளியேறுகிறான்,
கண்கள் மட்டும்
அவளையே பார்த்துக் கொண்டிருக்க...
அவன் நடந்து போகும் பாதைகளில்
இருள் மட்டுமே விழித்திருக்கிறது
- மு.முகமது பாட்சா
அவன் உட்கார்ந்திருக்கிறான்,
அவளோ, மூன்றாம் சாமத்தை
கட்டிப் பிடித்துக் கொண்டு
உறங்குகிறாள் !
முள் படுக்கையில்
முட்டிக்கால் போட்டு உட்கார்ந்திருப்பது
கொடுமையானது,
மௌனம் வெற்றிடத்தை விரித்து
விழிகளால் சுற்றிப் பார்க்கிறது,
கண்களைக் கழற்றி
அவளருகினில் வைத்துவிட்டு
அவன் மட்டும் வெளியேறுகிறான்,
கண்கள் மட்டும்
அவளையே பார்த்துக் கொண்டிருக்க...
அவன் நடந்து போகும் பாதைகளில்
இருள் மட்டுமே விழித்திருக்கிறது
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment