இன்று கவி உமர்கய்யாமின் பிறந்த நாள் மே- 18
நாள்காட்டியில் பல சீர்திருத்தங்கள் கொண்டுவந்து ஜலாலி (Jalali) என்ற புதிய நாள்காட்டியை உருவாக்கினார். ஓராண்டு என்பது 365.24219858156 நாட்கள் என்று துல்லியமாக கணக்கிட்டவர் உமர் கய்யாம்.
***
கவிதைகளின் நாயகன்
பாரசீகத்தின் பட்டுக் கம்பளம்!
ரூபயாத் தின் தந்தை!
இவரால்
கவிதைகள் வாழ்ந்தன!
இன்னமும் வாழ்கின்றன !
***
ஓ! என் நேசமே,
நிரப்பு யென் கோப்பையை
தொடர்ந்தக் கவலைகளும்,
வரும் அச்சங்களும் விலகித்தான் போகட்டும்!
இன்னொரு நாளெதற்கு ?
இன்றே நிரப்பு!
நாளையும் நான் நானாகவேயிருப்பேன்
என் ஆயிரம் ஆண்டுகளுடன்!
- உமர்கய்யாம்.
(தமிழில்: முகமதுபாட்சா)
***
No comments:
Post a Comment