Thursday, 4 May 2017

மௌனம் கலைத்து....

சித்தார்த்த கெளதமனின் 
சிந்தையைத் தூண்டிச் சென்ற 
மூப்புக் கிழவனும் 
முகவரியில்லாப் பிணமும் 
சாக்காட்டை நோக்கும் நோயானும் 
மட்டுமில்லாமல்

No automatic alt text available.

நோக்காடுக் கொடுக்கும் நோவினையாய் 
யசோதரையும், ராகுலனும் 
பாடம் சொன்ன யாழ்க்காரனும் 
தாகம் தீர்த்தச் சுமேதையும் 
கூடவேதான் சுற்றித் திரிகிறார்கள்... 
யாரும் பார்க்காமல்!

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts