முதலில் வாயை மூடிக்கொண்டேன்
பேசாமல் இருக்க முடியவில்லை,
பிறகுதான்
பேசுவதையே மறந்து போனேன்,
காதுகளையும் கழற்றி விட்டேன்,
கேட்பவை
என்னைப் பேசச் சொல்லி வற்புறுத்துகின்றன,
கால்களை மறந்து விட்டேன்
அவை எங்காவது போகச் சொல்கிறது,
நானேன் போகவேண்டும் ? இதுயென் தேசம் !
கைகளைக் கட்டிக் கொண்டேன்
இஃது ஆள்பவர்களுக்கு
அதிகமாகவே பிடித்திருக்கிறது...
இப்போது எனக்கும் கூட,
கண்களும் எனக்குத் தேவைப்படவில்லை,
காட்சிகள்தான்
மனசில் கோபத்தை விதைக்கின்றன,
நானொரு ஊனனென்று சொன்னால்
சொல்லிவிட்டுப் போங்கள்,
எதுவுமேயில்லாத பிணத்திடம்
நீங்கள் உச்சமாக
வேறு என்னதான் பேசிவிட முடியும் ?
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment