
தாஜ் மெஹலின் வீதியில்தான்
அவள் தாஜ் மெஹல்களை
விற்பனைச் செய்கிறாள்!
அவள் பெயரும் மும்தாஜாக இருக்கலாம்!
தினம் சில ஷாஜஹான்கள்
பல் இளித்துப் போகிறார்கள்!
விரல்களால்
அவளின் விரல்களை நக்குகிறார்கள்!
அவளின் வறுமையும்
அவர்களுக்கு வசதியாகிப் போகிறது!
ஆடை உரித்துப் பார்க்கும் கண்களை...
அவளென்ன செய்துவிட முடியும்!
சுற்றுலாக் காரர்களுக்கு
அவளும் ஒரு நினைவுச் சின்னம்தான்!
அவளுக்குள்ளும் ஒரு காதல் இருக்கிறது...!
தாஜ் மெஹல்களைக் விற்றுக் கொண்டே...
ஷாஜஹானைத் தேடி!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment