மௌனத்தை மிதித்துக் கொண்டு
வெளியேறியது
சித்தார்த்தனின் கால்கள்,
தள்ளாடியக் கிழவன்
தள்ளிவிட்டுப் போனான்
அவனின் விழித்தெழுந்த ஞானத்தை,
நோயனின் தொடர் இருமலும்
கலைத்தது அவனது மௌனத்தை,
இறப்பின் வழி அழுகைச் சப்தம்
வண்டுகளாய்ப் பறக்க ...
மூடிய கண்களுக்குள்ளும்
பிடிபடாத மௌனன்,
போதியாய் விரிந்து கிளைப் பரப்புகிறான்,
மெல்லத் தெளிந்து
அமைதி பூக்கும் நேரத்தில்
சருகுகளின் சப்தஸ்வரத்திலமர்ந்து
யசோதரையும், ராகுலனும்
கௌதமனிடம்
ஏதோ பேசிக் கொண்டேயிருக்கிறார்கள் !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment