Monday, 15 May 2017

பூனைகளின் காமம்

ஒரு கவிதையொன்றை படித்தேன் 
அதில் பூனையொன்று 
படிமமாக உட்கார்ந்திருந்தது, 
அஃது அவளாகவும் , அவனாகவும் மாறுகின்றது, 
பதுங்கி நடந்து பால் குடிக்கிறது, 
காமத்தின் கரையில் உட்கார்ந்து கொண்டு 
கண்களை உருட்டுகின்றது, 
சாமத்தில் உறங்காமல் விழித்திருக்கிறது, 


Image may contain: 1 person
கால நழுவலில் அவனும் அவளும் 
பூனைகளாகவே மாறி விடுகிறார்கள், 

ஒருவருக்கொருவர் பிறாண்டிக் கொள்கிறார்கள், 
காம மூர்க்கத்தில் கடித்துக் கொள்கிறார்கள், 
பூனைகளின் மதன நீர் வீச்சத்தில் 
கவிதையைச் சுற்றி 
சில எறும்புகள் ஊர்ந்து கொண்டிருந்தன, 
இதே பூனைகளை 
வேறொரு கவிதையிலும் பார்த்திருக்கிறேன், 
அங்கிருந்துதான் இடம் மாறியிருக்க வேண்டும்... 
மெல்லப் பூனை நடை போட்டு ! 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts