Monday, 22 May 2017

கனத்த மௌனம்

Image may contain: cloud, sky, outdoor and nature

கனத்த மௌனத்தை 
தூக்கிக் கொண்டு நடக்கிறேன், 
நீண்டக் கவிதையொன்றைப் பரிசாகக் கேட்கிறாய், 
வார்த்தைகளை எப்படிப் பேச வைப்பது ? 
கவிதையொன்றைப் புதைத்தவிடத்தில் 
போதிமரமொன்று துளிர்விட்டிருக்கிறது, 
அது விருட்சமாக விரியும்வரை 
மௌனமாகக் காத்திருப்பாயா ? 
மௌனம் ஒரு சமுத்திரத்தையும், வனத்தையும் 
சுமந்து கொண்டே திரிகிறது, 
விருட்சம் வீசும் காற்றில் மௌனம் சிதைந்து 
அலைகள் உயரே எழும்பலாம், 
அப்போது கவிதையெழுப்பும் சப்தத்தை 
காதுகள் கேட்கக் கூடுமா? 
போதி விருட்சத்தின் பழங்களைச் சாப்பிடும் 
பறவைகளின் எச்சத்தில் 
எத்துணை மௌனங்கள் முளைக்கப் போகின்றதோ, 
யாருக்குத் தெரியும் ? 
மௌனம் மௌனமாக நடந்து போகட்டும், 
அதன் அணுக்கூறுகளில் பிரளயமொரு 
நீண்டப் பெரும் கவிதையொன்றை 
எப்போதும் எழுதவேண்டாம் ! 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts