Thursday, 4 May 2017

வசீகரனின் ஆடுகள் -3

வசீகரன் 
வரைந்து கொண்டிருந்த ஓவியத்தில் 
யவனராணி 
இவனின் ராணி போலவேயிருந்தாள், 
அந்த ஒற்றை மச்சத்தையும் 
மூக்கின் கீழ் 
அப்படியே ஒட்டி வைத்தான், 
அவளின் இதழ்பிரிக்கா புன்னகையில் 
சிக்கிக் கொண்டவன் 
சற்றே கழுத்தின் கீழிறங்கி 
வெப்பத்தின் காற்றைச் சுவாசித்தான் 
அப்போதுதான் கவனித்தான் 
அவளின் இதழ்க் கடையில் வழிந்த 
செவ்வண்ணம் 
மார்பில் ஒட்டிக் கொண்டிருந்தது 
எப்படி நடந்தது ? 
அவளின் கைகளில் 

thriller girl Hd க்கான பட முடிவு
வரையாத நகங்கள் வளர்ந்திருந்தன 
அவள் மெல்ல இதழ்களைப் பிரித்தாள் 
கோரைப் பற்கள் நீண்டிருந்தன 
"நான் வரையாதவளே 
நீ யார்?" என்றான் 
அறையதிர சிரித்தவள் 
"உன் மனதிற்குள் வாழ்ந்தவள்தான்" 
என்று சொன்னவள் 




அவனை அப்படியே 
விகாரத்துடன் விழுங்கிக் கொண்டிருந்தாள் 
அலறியெழுந்தவனின் 
தூக்குச் சட்டி உணவுகளை 
ஆடுகள் அமைதியாக நின்று 
பசியாறிக் கொண்டிருந்தன 
நிழல் மட்டும் சற்று இடம் மாறி படுத்திருந்தது.

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts