காதலில்லா உலகம்
கவிதையிழந்து தவிக்கும்
௦
காற்றைப் பிடித்து
கடலில் கரைக்கிறேன்
கவிதையொன்றை
கடத்துவதற்காக ...
௦
அம்மாயென்ற
ஒற்றைச் சொல்லில்தான்
உயிர் இருக்கிறது (அ)
மெய் இருக்கிறது (ம்)
உயிர்மெய்யும் இருக்கிறது (மா)
௦
முகம் காட்டும் கண்ணாடி
முகம் பார்ப்பதில்லை
௦
ஒன்றாகக் குவிந்து
மெல்ல விரல் நழுவி
ஒன்று மில்லாததென
ஆன பிறகே உணர்கிறோம்
நாமும்
ஒன்றுமில்லாத ஒன்றென்று!
0
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment