தீர்வைச் சுற்றி நகர்ந்தும்
தீர்வைத் தேடாதத் தீர்வுகளாய்
போர்வைப் போர்த்திப் படுத்துறங்கும்
காட்சிப் பிழைகள்!
மௌனங்கள் கிழிந்து தொங்குகின்றன
போதி மரத்தின் கிளைகளில்!
பிட்சுகளின் கைகளில்
நிறம் மாறும் கோடாரிகள்
துப்பாக்கி ரவைகளில்
வேதம் படிக்கும்
ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகள்!
பாலஸ்தீனத்தில் அழும் குழந்தைகளுக்கு
முகம் திருப்பிப் போகும் முல்லாக்கள்

ஆயுதம் விற்கக் கயமையைக் கூட்டும்
மேற்கத்திய நாடுகள்!
சிலுவையின் ஆணிகளில் ரத்தம் வழிகிறது
யூதர்களின் சினேகத்தால்
அழிக்கப்பட்ட இனத்தின் அழுகுரல்
அடங்கிக் கிடக்கிறது இலங்கையின் மண்ணுக்குள்!
வேதபுத்தகங்களின் வேள்வித் தீயில்
சாதியக் கூறுகளின் சங்கிலியொலிகள்
எண்ணெய்க் கிணறுகளின் அரசியலில்
அடிக்கடிச் செத்தெழும் அரபு நாடுகள்!
விவசாய நிலங்களில் இரத்தின விரிப்புகள்
மேக் இன் இந்தியா
மேட் இன் இந்தியாவைத் தொலைத்துக் கட்ட
விழித்துத் தானிருக்கிறோம்...
போர்வைப் போர்த்திப் படுத்துறங்கும்
காட்சிப் பிழைகளாய்
- மு.முகமது பாட்சா
தீர்வைத் தேடாதத் தீர்வுகளாய்
போர்வைப் போர்த்திப் படுத்துறங்கும்
காட்சிப் பிழைகள்!
மௌனங்கள் கிழிந்து தொங்குகின்றன
போதி மரத்தின் கிளைகளில்!
பிட்சுகளின் கைகளில்
நிறம் மாறும் கோடாரிகள்
துப்பாக்கி ரவைகளில்
வேதம் படிக்கும்
ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகள்!
பாலஸ்தீனத்தில் அழும் குழந்தைகளுக்கு
முகம் திருப்பிப் போகும் முல்லாக்கள்
ஆயுதம் விற்கக் கயமையைக் கூட்டும்
மேற்கத்திய நாடுகள்!
சிலுவையின் ஆணிகளில் ரத்தம் வழிகிறது
யூதர்களின் சினேகத்தால்
அழிக்கப்பட்ட இனத்தின் அழுகுரல்
அடங்கிக் கிடக்கிறது இலங்கையின் மண்ணுக்குள்!
வேதபுத்தகங்களின் வேள்வித் தீயில்
சாதியக் கூறுகளின் சங்கிலியொலிகள்
எண்ணெய்க் கிணறுகளின் அரசியலில்
அடிக்கடிச் செத்தெழும் அரபு நாடுகள்!
விவசாய நிலங்களில் இரத்தின விரிப்புகள்
மேக் இன் இந்தியா
மேட் இன் இந்தியாவைத் தொலைத்துக் கட்ட
விழித்துத் தானிருக்கிறோம்...
போர்வைப் போர்த்திப் படுத்துறங்கும்
காட்சிப் பிழைகளாய்
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment