Tuesday, 2 May 2017

ஒற்றைப் புள்ளி



புரிதலே இல்லாமல் 
ஒற்றைப் புள்ளி நின்று கொண்டு 
நான் தான் புரிதல் என்கிறது? 
ஓவியனின் தூரிகையின் சிதறல்கள் 
ஓவியமாய் 
இருந்தாலும் துடைக்கப் படும்! 
பிக்காஸோவை 
புரியாமல் வாங்கிச் செல்கிறான் 
சுவற்றில் மாட்டி வைக்க? 
அவன் தேவையாகப் பிக்காஸோ! 

.  நவீன ஓவியங்கள் க்கான பட முடிவு
வார்த்தைகளை ஒட்டவும் 
வெட்டவும் கற்று வைத்திருக்கிறான் 
மரபைச் சாய்த்தவன் 
காதலுக்குள் சிக்கிக் கொண்ட மகளை 
வெட்டிவிடுவதாய்ப் பயம் காட்டி! 
நவினம் ஏற்காமல் நகர்கிறது 
அந்த ஒற்றைப் புள்ளி 
அ 
து 
நீயாகவும் இருக்கலாம்! 
நானாகவும் இருக்கலாம்! 
.

மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts