Sunday, 21 May 2017

நதியாக மாறவேண்டாம்


beautiful love hd painting க்கான பட முடிவு
வார்த்தைகளில்லாத கவிதையை 
உன்னைப் பார்த்த பின்புதான் வடிக்கிறேன், 
படிமங்களாய் மாறும் உன்னழகில் 
எதை நான் பார்த்து ரசிப்பது? 
உன்னையும் என்னையும் 
தாலாட்டும் மேகங்கள் நகர்வதால் 
மலையின் உச்சியில் நாமிருக்கிறோம், 
கூடவே சூடான தேநீருமிருந்தால் 
இன்னமும் கவிதையின் சுவைக் கூடும், 
நம்மைப் பார்த்து சிரிக்கும் அந்தப் பூக்கள் 
என்ன சொல்லிச் சிரிக்கக் கூடும்? 
அருவியாய் மாறி 
கீழே இறங்கிப் போகலாம் வா... 
சங்கமத்தின் கூடலில் 
இன்பச் சுவைக் கூட்டி எதையாவது தேடலாம், 
கூடல் தழுவல்களின் குளிர்மையில் 
முல்லையும் மல்லிகையும் பூத்துச் சொரியலாம், 
இறங்கியவுடன் 
நதியில் மூழ்கி கடலில் கலக்க வேண்டாம்... 
பறவைகளாய் மாறி 
மீண்டும் மலையின் உச்சிக்கே செல்வோம், 
அங்குதான் 
நானெழுதி வைத்த கவிதையின் மிச்சமிருக்கிறது! 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts