எழுத்துக் கூட்டிப் படிக்கக் கூட
எங்களால முடியல
பறையடிக்கும் எங்கப்பனுக்கோ
பாடமொன்னும் புரியல
சொல்லித் தரும் வாத்திக்கோ
தொட்டுப் பேசப் புடிக்கல
"படிச்சி யென்ன ஆவப் போர?"
நக்கலுக்கும் குறைவில்ல

சாதியின்னும் பேதியின்னும்
சொல்லுறதும்தான் புரியல
சாதிக்கத்தான் நெனச்சாலும்
சாத்துக்கழிச் சரியில்ல
விளக்கு கூட எங்களுக்கு
ஒழுங்காத்தான் கிடைக்கல
வீதியில நடந்து போனா
நாத்தப் பார்வை புடிக்கல
நாடுவிட்டு நாடுபோக
எங்களுக்குமே தெரியல
சோத்துக்கும்தான் வழியில்லாம
படிப்பும்தான் சுகமில்ல...
சோதனைக்குப் பொறந்த கூட்டம்
சாதிக்கத்தான் வழியில்ல
இந்த வாழ்வு எப்ப விடியும்
எங்களுக்கும்தான் வெளங்கல
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment