வீ நிறைச் சோலையவள்!
வீசும் தென்றலவள்!
பா நிறைப் பாடியென்னை..
தோள் சுமந்த அன்னையவள்!
பத்துத் திங்கள் அறைத் தந்தாள்;
வாடகையேதும்
வாங்கவில்லை!
நிலாக் காட்டிச் சோறூட்டி
வித்தகனாய் வளர்த்திட்ட..
கலா கலைச் சாலையவள்!
கண் நிறைந்த அன்னையவள்!
000000000
(மீள் கவிதை. எனது பள்ளி பருவத்தில் முதல் கவிதையும் கூட. மராத்திய முரசு நாளிதழ், முஸ்லிம் முரசு சிற்றிதழில் அப்போதே வெளிவந்தது.)
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment