
கேள்விகள் கேட்கச் சொல்கிறான்
கேள்விகளுக்குள்
கேள்விகளை விதைத்தவன்!
பழுத்த தாடிக்காரனுக்கு
பரிசாகக் கிடைக்கிறது
ஒரு கோப்பை விஷம்!
மெலிடஸின் தந்திர வாதத்தில்
முகம் மூடி மறைந்திருந்த
மூட நம்பிக்கைகள்
முக்காடுகளை வீசி யெறிகின்றன...
சாக்ரடிஸின் முகத்தின் மீது!
இளைஞர்களுக்கு
விஷம் ஊட்டுகிறானாம் சாக்ரட்டீஸ்!
அனிடசும், லைக்கோனும்
ஆணித் தரமாய்ச் சொல்லுகிறார்கள்!
இப்போதும்...
சாக்கரட்டீஸ் சிலையாக இருக்கிறான்!
தத்துவங்கள் புத்தகத்தில் இருக்கிறது!
இன்னமும் கேள்விகள் கேட்பவன்
சிறைகளுக்குள்தான் இருக்கிறான்
மரணத்தைச் சுவைத்துக் கொண்டு!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment