Saturday, 6 May 2017

திறக்காத கதவுகள்

அறையின் கதவுகளை அடைத்துவிட்டு 
எங்களை வெளியே வரச் சொல்கிறீர்கள் 
நாங்கள் எப்படி வரமுடியும் ? 
கதவுகள் திறக்கமுடியாத சிக்கலில் 
சிக்கிக் கிடக்கின்றன 
பழமைகள் துருப்பிடித்து 
அழுத்திக் கொண்டதால் இருக்கலாம் 
அரசியல் சுய நலத்தின் அழுக்குகள் 

Romm arrested peoples morden painting in hd க்கான பட முடிவு
அடைபட்டதாலும் இருக்கலாம் 

திறக்கும் முயற்சிகளில் 
நாங்கள் எப்போதும் ஈடுபட்டதே கிடையாது 
உள்ளிருந்து வெளிவருவதற்காக 
கத்திக் கொண்டுதான் இருக்கிறோம் 
யாராவது வந்து கதவைத் திறந்து விடுங்கள் 
உங்களை மிதித்துவிட்டு 
நிச்சயம் வெளியே வந்து விடுவோம் 
நாங்கள் சுத்தமானவர்கள் 
எங்கள் கைகள் அழுக்காவதை மட்டும் 
நாங்கள் என்றுமே விரும்புவதில்லை 
இல்லையென்றால் ஓர் ஓட்டையைப் போட்டு 
வெளிச்சத்தை உள்ளே நுழையுங்கள் 
விடிந்துவிட்டதாக எண்ணியே 
வாழ்ந்து விடுகிறோம்...

- மு.முகமதுபாட்சா

No comments:

Post a Comment

Popular Posts