Tuesday, 9 May 2017

கால எந்திரம்

time machine க்கான பட முடிவு

நான் 
காலத்தின் பின்னோக்கிதான் 
நுழைந்திருக்கிறேன், 
இப்போது என் அம்மா 
என்னருகில்தான் நிற்கிறாள் ! 
அத்தா பதித்த முத்தம் 
என் கன்னத்தில் இன்னமும் 
ஈரமாகவே இருக்கிறது... 
சற்று நகர்கிறேன் 
மனைவியுடன் 
சண்டைப் போட்டுவிட்டுச் சென்ற 
அண்ணன் 
அண்ணியுடன் அமர்ந்து 
சிரித்துப் பேசிக் கொண்டு... 
ஆம் ! 
அவளென் அத்தையேதான் 
மாமாவிடம் 
இப்போதும் குறும்பு செய்கிறாள்... 
எனக்கு வாய்த்தவள் 
அப்படியேதான் இருக்கிறாள் 
ஆனால், 
பாவாடை தாவணியோடு... 
இதுவும் அவளேதான் 
இந்த வெட்கத்தை 
இதற்குப் பிறகு 
நான் பார்த்ததேயில்லை, 
தேடுகின்ற சந்தோஷங்கள் 
உறவுகளாய் 
ஒவ்வொரு நகர்விலும்.... 
எவ்வளவு மகிழ்வானது ! 
காலத்தோடு மகிழ்வுகளும் 
உதிர்ந்துதான் போகின்றன... 
சட்டென்று என்னை 
நிகழ்காலத்திற்கு இழுத்துவிட்டான் 
என் மகன் 
நிழற் படங்களின் தொகுப்பை 
பறித்துச் சென்று... 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts