Saturday, 20 May 2017

பெண்ணே சுயம் காட்டு



பெண்ணே..
ஆடை மாற்றல்
சுதந்திரம் என்கிறாய்!
நீ-இன்னமும்
மண்ணுக்குள் 
முகம் புதைத்து
பழம் பெண்ணாகவே 
யிருக்கிறாய்!

காமம் பேசுவது
சுதந்திரம் என்றால்
ஆண் இனத்தின்
அடிமையாகவே
இன்னமும் 
இருக்கிறாய்!

ஒப்பனைக்குள் இருப்பது
உன் பழைய முகமே!

பெண்விடுதலை க்கான பட முடிவு
நீ-
அழகுணர்ச்சிக் காகவே
இன்னமும் சிரிக்கிறாய்!

அழுகின்ற 
உன் உள் மனதை
வெளிப் படுத்த 
ஏன் தயங்குகிறாய்?

பின்
எதுதான் சுதந்திரம்!?

ஒரு நாள்
நீ சமைத்தால்
மறு நாள்
அவனை சமைக்கச் சொல்!

அவரவர் துணிகளை
அவரவர் துவைக்கச் சொல்!

விரும்பினால் தொடச் சொல்
விரும்பா விட்டால்
விலகச் சொல்!

அரசியல், சமூகம்
அனைத்தும் பேசு...
அதிலும் உன்
சுயத்தையே பேசு!

உன் சேமிப்பை
உன் கணக்கிலேயே வை!

ஊதாரிக் கணவனை
உதறித் தள்ளி எழு!

கணவன்
குடித்து விட்டு வந்தால்
குப்புறப் போட்டுத் தாக்கு!

சந்தேகக் கணவனை
சாக்கடையில் தள்ளு!

உன்னைத் தானே
குத்து விளக்கென்று
இவர்கள் சொன்னார்கள்?
வெளிச்சம் தரும் உன்னை
இருட்டாக்க வந்தால்
சுட்டெரித்து 
உன் சுயம் காட்டு!

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts