
இந்த உலகம்தான்
மிகவும் முக்கியமென்கிறாய்,
பிறகேன் அஃது
இரத்த வண்ணம் பூசிக் கொள்கிறது?
யாருக்காக இவர்கள்
இங்கே அடித்துக் கொள்கிறார்கள் ?
நமக்காகத்தானென்றால்
நாம் இன்னமும்
ஏழைகளாகத்தானே இருக்கிறோம் ,
இடுகாடுகள் ஏன்
இன்னமும் பிரிந்தே கிடக்கின்றன?
அழுகும் பிணங்களுக்கேன்
ஆசைகள் அதிகமாகிப் போனது?
கேள்விகளுக்கு விடைத் தெரியவில்லையா?
தெரியாது !
கேள்விகள் கேட்க
உன்னை அவர்கள் அனுமதிக்கவேயில்லை
அதனால்தான்
அவர்கள் ஆச்சரியக் குறிகளாகவே
உன்னெதிரில் நிமிர்ந்து நிற்கிறார்கள்,
இந்த உலகம்தான்
மிகவும் முக்கியமென்றால்,
இனி கேள்விகளால்தான் நாம்
நிமிர்ந்து நிற்கவேண்டும்,
இல்லையென்றால்
இந்த உலகம் எப்படி முக்கியமாகும் ?
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment