Wednesday, 17 May 2017

சேகரம்


பட்டாம்பூச்சி க்கான பட முடிவு


செய்தி 
சேகரிக்கச் சென்றவன் 
உன்னை 
சுவிகரித்து வந்திருக்கிறேன்... 
தலைப்புச் செய்தி 
யாகாமல் பார்த்துக் கொள்! 

  000

மெளனத்தை
வீசியெறிந்து விட்டேன்...
வா!
என்ன பேசலாமோ
பேசலாம்!


  000

தீட்டு யென்று 
விலகிப் போனவள்..
காற்றில் கலந்த அவளின்...
மூச்சுக் காற்றை...
கலந்தே சுவாசிக்கிறாள்!

  000

விழிகளின் கண்ணீரை துடைக்க
மனதிற்கு தெரியவில்லை!

  000

முக நூலில்
விருப்பம் வேண்டி
வந்து விழுந்தன
வார்த்தைகள்!
போட்டியில்
நிழற் படங்கள்தான்
அள்ளிச் சென்றன
விருப்பங்களை!
ஆனாலும்...
விமர்சனங்களை
அள்ளி அணைப்பது
வார்த்தைகள்தான்!

   000

தொலைந்து போனவைகளை
தொலைக்கத்தான் பார்க்கிறேன்
ஆனாலும்,
அவைகள்...
தொலையாமல் தான்
என்னைத்
தொலைக்கின்றன!

  000

தூங்கிய பிறகும்
விழித்திருந்தது
வறுமை!

  000

மௌனத்தை
தின்று கொண்டிருந்தது
கடந்த காலம்!

  000

எதை மறைத்தாய்
என்றுதான்
பார்த்தேன்,,,
திருடனென்று
என்னை பார்க்கிறாய்!

  000

இரவுகளை திருடுபவர்கள்
திருடிக் கொள்ளுங்கள்....
காலையிடம் கற்றுக் கொள்கிறேன்!

  000

கவிதைகள் - மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts