கர்ணனிடம்
கவச,குண்டலத்தைக்
கேட்டுப் பறித்தார்கள்
நிதானம் சூடிக் கொண்டான்
சூத்திரனென்று
ஒதுக்கித் தள்ளினார்கள்,
பயத்தில் உளறுகிறீர்கள்
என்றான்
சூரியனின் புத்திரனென்றார்கள்
சிரித்தான்
நேரத்திற்குப் பிறழும் நாவு
என்றான்,
சூதாடியின் கூட்டமென்றார்கள்
சூதுக்காரன்
உங்கள் தலைவனென்றான்,
குந்திதான் உனக்கு
எமன் என்றார்கள்
இரண்டு முறை
தவறு செய்த தாயென்றான்,
சல்லியனைப் பார்த்து
என் ரத்தம் சுத்தமென்றான்,
சூதுகளின் அம்பில்
சூனியமானவன்
காந்தாரியின்
பார்வைகளைக் கொண்டு
பார்த்தனையே பற்ற வைத்தான்,
கோபத் தீயில் ஒரு யுகம்
கருகிக் கொண்டிருந்தது
- மு.முகமது பாட்சா
கவச,குண்டலத்தைக்
கேட்டுப் பறித்தார்கள்
நிதானம் சூடிக் கொண்டான்
சூத்திரனென்று
ஒதுக்கித் தள்ளினார்கள்,
பயத்தில் உளறுகிறீர்கள்
என்றான்
சூரியனின் புத்திரனென்றார்கள்
சிரித்தான்
நேரத்திற்குப் பிறழும் நாவு
என்றான்,
சூதாடியின் கூட்டமென்றார்கள்
சூதுக்காரன்
உங்கள் தலைவனென்றான்,
குந்திதான் உனக்கு எமன் என்றார்கள்
இரண்டு முறை
தவறு செய்த தாயென்றான்,
சல்லியனைப் பார்த்து
என் ரத்தம் சுத்தமென்றான்,
சூதுகளின் அம்பில்
சூனியமானவன்
காந்தாரியின்
பார்வைகளைக் கொண்டு
பார்த்தனையே பற்ற வைத்தான்,
கோபத் தீயில் ஒரு யுகம்
கருகிக் கொண்டிருந்தது
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment