சாயையோடு
சண்டையிட்டுக் கொண்டிருந்த ஆடுகள்
வெற்றித் தோல்வியில்லாமல்
போராடிக் கொண்டிருக்க,
வசீகரனின் குழலிசையில் மாயம் இருப்பதாக
கலகம் செய்தன ஓநாய்கள்
உச்சி வெயிலில் உறங்கிய நிழலை
தோற்றோடியதாக
வெற்றிக் கொண்டாடின ஆடுகள்,
கேளிக்கையில்
ஓநாய்களும் கலந்து கொள்ள
மீண்டும் நிழல்கள் ஆங்காரமெடுத்து
சண்டை மிகுத்தது
வழிந்த உதிரங்களை நக்கிய ஓநாய்கள்
அவை நிழல்களின் குருதிகள்தானென்று
சத்தியம் செய்தன,
அந்தியில் பட்டியிலடைத்த மேய்ப்பன்
காணாமல் போன ஆடுகளை
தேடிக் கொண்டிருந்தான் வருத்தத்துடன்
ஓ நாய்களின் கால்தடம் பற்றி !
- மு.முகமது பாட்சா
சண்டையிட்டுக் கொண்டிருந்த ஆடுகள்
வெற்றித் தோல்வியில்லாமல்
போராடிக் கொண்டிருக்க,
வசீகரனின் குழலிசையில் மாயம் இருப்பதாக
கலகம் செய்தன ஓநாய்கள்
உச்சி வெயிலில் உறங்கிய நிழலை
தோற்றோடியதாக
வெற்றிக் கொண்டாடின ஆடுகள்,
கேளிக்கையில் ஓநாய்களும் கலந்து கொள்ள
மீண்டும் நிழல்கள் ஆங்காரமெடுத்து
சண்டை மிகுத்தது
வழிந்த உதிரங்களை நக்கிய ஓநாய்கள்
அவை நிழல்களின் குருதிகள்தானென்று
சத்தியம் செய்தன,
அந்தியில் பட்டியிலடைத்த மேய்ப்பன்
காணாமல் போன ஆடுகளை
தேடிக் கொண்டிருந்தான் வருத்தத்துடன்
ஓ நாய்களின் கால்தடம் பற்றி !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment