Wednesday, 3 May 2017

உலக பத்திரிக்கயாளர் தினம்

இன்று உலக பத்திரிக்கையாளர் சுதந்திரதினம் !

ஊடகங்கள் இன்று சுதந்திரமாக செயல்படுகின்றதா என்றால் நிச்சயமாக கிடையாதென்றுதான் சொல்லமுடியும் . ஒரு பத்திரிக்கையென்பது செய்தியாளர்களின் உண்மைத் தன்மையால்தான் நிலை நாட்டப்படவேண்டும். இன்று செய்தியாளர்கள் சாதாரண கார்ப்ரேட் ஊழியர்களாகவே தங்களை மாற்றிக் கொண்டார்கள். 

செய்தி ஊடகங்கள் இன்று அரசியல்வாதிகளின் சொந்த ஊடகங்களாகவும், கார்ப்ரேட் கப்பெனிகளின் ஊடகங்களுமாகத்தான் இருக்கின்றன. இவைகளிடம் எப்படி உண்மைத் தன்மைகளை எதிர் பார்க்கமுடியும்?

பத்திரிக்கை சுதந்திர தினம் க்கான பட முடிவு

இந்தியாவில் முதல் பத்திரிக்கை அடக்குமுறை வாரன்ஹேஸ்டிங் காலத்தில் நடந்ததாக அறியமுடிகிறது.  1781 ல் வங்காள கெசட் என்ற பத்திரிக்கை மீது அவர் தாக்குதலை நடத்தி அதன் ஆசிரியரை கைது செய்துள்ளார்.

1991 ல்தான் ஆப்ரிக்க பத்திரிக்கையாளர் சம்மேளனம் ஒரு சிறப்பு நாளை அறிவிக்க ஐ.நா மன்றத்திடம் அனுமதி வைத்தது. 26 வது அமர்வில் அதற்கான தீர்மானம் நிறைவேற்றப் பட்டு இந்த நாள் உலகம் முழுவதும் கொண்டாடப் படுகிறது.

பத்திரிக்கையாளர்களின் மீதான வன்முறை தாக்குதல்கள் இப்போதுதான் உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. அதற்காக ஐ.நா மன்றம் எந்த ஒரு தனி நடவடிக்கையும் எடுக்கவில்லையென்பது மிகவும் கேவலமானது. 

பாலஸ்தீன பத்திரிக்கையாளர்களின் மீதான வன்முறை தாக்குதல்கள் இஸ்ரேல் அரசாங்கத்தால்,இன்றளவும் அதிகளவில் கட்டவிழ்த்து நடைபெற்று வருகிறது.

இந்தியாவிலும் பத்திரிக்கையாளர்களை அச்சுறுத்துவது, கொலை செய்வது சகஜமான ஒன்றாக மாறிவிட்டது. 

உண்மையான சுதந்திரமில்லாமல் , இன்றைய பத்திரிக்கயாளர்களின் உலகம் சுதந்திரதினம் கொண்டாடுவதும் ஒரு வேடிக்கைதான்.

- மு.முகமதுபாட்சா


No comments:

Post a Comment

Popular Posts