Wednesday, 3 May 2017

தேடும் கவிதை

தொடர்புடைய படம்

வார்த்தைகள் கிடைக்காமல் 
காத்துக் கிடக்கிறது 
கவிதையின் முதல் வரி! 
மோகத்தை நிரப்பி 
வார்த்தைகளில் பயணிக்கும் 
எழுதுகோலின் முனைகள் 
மேகக் குளுமையில் நுழைந்து 
முகடுப் பள்ளங்களில் 
மோகித்து ஊடுருவித் தவித்து 
மூங்கில் காடுகள் 
பற்றி யெரியும் வேளையில் 
வியர்வை நதியில் நனைந்தே... 
முத்தெடுத்த அடுத்தடுத்த வரிகள் 
முடிவெடுக்கும் வார்த்தைகளுக்காய் 
மூழ்கிதான் தவிக்கிறது... 
கவிதையை 
முடித்துவைக்கத் தெரியாமல்! 
புத்தனையும் 
சித்தனையும் தேடியலைந்து 
தத்துவம் பேச எத்தனிக்கையில் 
ஞானத்தின் 
தேடலும் முடிவின்றித் தொடர.... 
முடியாத கவிதையாய்க் 
காத்துக் கிடக்கிறது 
முடித்து வைக்க யார் வருவாரென்று!


- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts