தூர்த்த இரவுகளை
தோண்டிப் பார்க்க முடியாமல்
கசடுகளின் கழிவில்தான்
கால் நனைத்துப் போகிறது
கல்மிஷ மனசு!
வேதாந்திகளின் மனசையும்
வேடிக்கைப் பார்க்கிறது
தூர்த்த இரவுகளின் துஷ்டப் புத்திகள்!
யதார்த்த வெளியில்
பரமாத்மாக்கள்
படுத்தேதான் கிடக்கிறார்கள்
தூர்த்த இரவுகளை
அவர்களுக்கும் சொந்தமாக்கி.. !அட்சயப் பாத்திரத்தின்
அடியில் ஓட்டையாம்
அடைப்பதற்குதான் சோம்பேறித்தனம்!
சூது வெளியில்தான்
சூட்சமம் சுற்றித் திரிகிறதாம்!
ஆசை யறுக்க முடியாமால்
பட்டினத்தாரின் கரும்பும்
சூத்தையாகிப் போனது!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment