Tuesday, 16 May 2017

தேடல்

முல்லா க்கான பட முடிவு

இல்லாதவிடத்தில் தேடிய 
முல்லாவிற்கு மட்டுமே தெரியும்
 
தேடுகின்ற எதுவுமே 
நாம் எடுத்துச் செல்வதில்லையென்று, 

கோடு போட்டு வாழ்பவன் 
கோடுகளை நகர்த்துகிறான்... 

ஆடையோடு எவனாவது -தன் 
அன்னை வயிற்றில் பிறக்கின்றானா? 

கோழைச்சளி சூழ்ந்த உடல் 
நாற்றமெடுத்த பிண்டம்தானே ! 

பாடுபட்ட சேர்த்தவெதுவும் 
பல்லாங்குழிகளில் தங்குவதில்லை... 

நாவின் ருசிக்கும் 
ஆசையின் சுவைக்கும் 
தூரமொன்றும் அதிகமில்லை. 

அடுத்தொரு ஆசை விழித்துக் கொண்டால் 
அம்மணமாய்க் கிடக்கும் உடல் ! 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts