Friday, 19 May 2017

மௌனம் ஒரு மொழி

மெளனங்களின்
அர்த்தங்களை...
மெளனிப்பவர்களால் மட்டுமே
உணர முடிகிறது

மெளனம் கூட ஒரு தவம்!
மெளனம்
ஒரு வேள்வியும் கூட

மௌனம் க்கான பட முடிவு

சில மெளனங்கள்
நியாயத்தை நியாயப்படுத்தும்!
சில மெளனங்கள்
நியாயத்தை காயப்படுத்தும்!

வலியுள்ள மெளனங்கள்
எதிரிக்கு
வலி ஏற்படுத்தும்
கருவிகளாகவே மாறிவிடும்!

சில மெளனங்கள்
சிலரை
வரலாற்றுக்கு கூட்டிப் போகிறது!

சில மெளனங்கள்
சிலரை
கல்லறைக்கு கடத்திப் போகின்றது

ரகசியங்களை காப்பதற்கு
மெளனம் மட்டுமே
சிறந்த பெட்டகம்

மெளனம்- ஒர்
உயிரியல் மொழி மட்டுமல்ல
உடலியல் மொழியும் கூட !

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts