பிணக்கின்
மெளனத்தை
பிம்பச் சிதைவுகளாக்கி
பழித் தாட்டுகிறது
நதியலை நீர்!
மெளனத்தை சிதைத்து
மெளனத்தை ஏன்
சுமக்கிறாய்?
உன்
மெளனத்தோடு
மெளனம்
சண்டையிடுவதை
உன் இதழ்களும்
விழிகளுமே
காட்டிக் கொடுக்கின்றன!
சற்றே சிரித்துவிடு!
அல்லது
உன் இதழை
மென்மையாய்
சற்றே விரித்துவிடு…
சிறகு முளைத்து
பறந்து விடும்
உன் வெற்றுக் கோபம்!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment