Friday, 5 May 2017

பிரபல இதழுக்காக

தொடர்புடைய படம்

அட்டைப் படத்தில் நடிகைப் படம் 
ஒட்டி அடுத்தப் பக்கத்தில் 
நகைக் கடை விளம்பரம்! 
ஓடிப் போன நாயகி பற்றி 
ஒரு பக்கக் கட்டுரை! 
உருப்படியில்லாத சினிமாவிற்கு 
ஒரு பக்க விமர்சனம்! 
அடுத்து வருகிறது 
சிகப் பழகுக் கிரீமும் 
முடி வளர்வதற்கான எண்ணெய்யும்! 
சிரிப்பே வராத சில்லறை ஜோக்குகள்! 
சாதியத் தூண்டலுக்காய் 
இரண்டு பக்கத்தில் கட்டுரை! 
ஆண்களின் ஜாக்கி ஜட்டிக்கும் 
வீரிய மாத்திரைக்கும் 
பெண் மாடல்களின் அரை நிர்வாணம்! 
அடுத்து வந்தது 
முக நூலில் திருடிய முழுமையான கவிதை! 
ரஜினியின் வாக்கு யாருக்கு? 
முக்கிய அலசல்! 
ஒரு பக்கக் கதைகளாய் இரண்டு மட்டும்! 
பிரபலம் எழுதிய 
தப்பான வரிகளில் முத்தானக் கவிதையும்! 
கடன் வாங்கியவன் பார்ப்பதற்கென்றே.. 
காலத்தைக் கணித்த ராசி பலன்! 
கட்டாயத்தின் பேரில் பிரபலன் தொடர்கதை! 
அடுத்தே வருகிறது 
பக்தியோடு திவ்விய தரிசனம்! 
தொடர்ந்து, 
கிளுகிளுப்பூட்ட யோகா பயிற்சி! 
டூ பீஸ் உடையில் பிரபல நடிகை! 
பேண்டீஸ் விளம்பரம், டூத் பேஸ்ட் விளம்பரம்! 
உலகின் நெம்பர் ஒன் இதழுக்காகவே 
அடுத்த வாரம் வரை 
நான் 
மீண்டும் காத்திருக்க வேண்டும்! 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts