Sunday, 21 May 2017

விரல்களில் சூது


ஏகலைவன் 
வில்லில் நாணேற்றுகிறான் 
நாலு விரல்களின் துணையுடன்! 
அருச்சுணனின் அம்புகள் 
குறித் தவறுகின்றன குருசேத்திரத்தில்!

Image may contain: 1 personசகுனியின் விரல்கள் 
பழித்தீயைப் பகடையாடுகின்றன! 
நூறு பேரும் 
காய்களாக நகர்கிறார்கள் சகுனியிடம்! 
அதிகாரப் பசிக்கு 
வஞ்சமும் சூதும் களமாடுகின்றன 
கண்ணனின் துணையுடன்! 
குடிகளில் ஒருவன் கேட்கிறான் 
சூரியர்களின் சண்டைக்கு 
சூத்திரர்கள் ஏன் பலியாக வேண்டும்? 
சாட்சிச் சொல்ல 
ஏகலைவனின் கட்டைவிரல் 
இப்போது இல்லை! 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts