அவளொரு நதியாக வடிவெடுத்து
பின்னர்க் கடலாய்
அதிசயங்களை உள்ளடக்கினாள்,
அலையாய் ஆர்ப்பரித்தவள்
சூரியனையே விழுங்கித் துப்பினாள்
மழையை விதைப்பதற்கென்றே
வெட்பத்தைக் குடிப்பவள்....
கரைத் தொட்டு
கவிதையெழுதத் தெரிந்தவள்,
இப்போது ஒரு கட்டுக்குள்
குளமாய்த் தேங்கிக் கிடக்கிறாள்,
வட்ட மதில்களின் சாரத்தில்
சந்தோஷம் கற்றுக் கொள்கிறாள்,
வானம் குறுகியதென்று
படிக்கக் கற்றுக் கொண்டவளிடம்,
ஆர்ப்பரித்தல் கோபமென்று
சொல்லிக் கொடுக்கப் பட்டது,
இறக்கைகளை மடித்துக் கொண்டவள்
நடப்பதும் பாவமென்று நினைக்கிறாள்,
தீவுக்குள் திட்டாக மாறியவளை
மீண்டும்
கடலாக யார்தான் விரிக்கப் போகிறார்கள் ?
அந்தத் திட்டிற்குள் நீர் அருந்துபவர்களே...
அந்தக் கடல்
உன் தாயாக இருக்கலாம்,
உன் தமக்கையாக இருக்கலாம்
ஏன், உன் தாரமாகவும் கூட இருக்கலாம் ,
கடலில் நீந்த வேண்டியவர்கள் நாம்,
இப்போது குட்டையில்தான்
மீன் பிடித்துக் கொண்டிருக்கிறோம்.
பின்னர்க் கடலாய்
அதிசயங்களை உள்ளடக்கினாள்,
அலையாய் ஆர்ப்பரித்தவள்
சூரியனையே விழுங்கித் துப்பினாள்
மழையை விதைப்பதற்கென்றே
வெட்பத்தைக் குடிப்பவள்....
கரைத் தொட்டு
கவிதையெழுதத் தெரிந்தவள்,
இப்போது ஒரு கட்டுக்குள்
குளமாய்த் தேங்கிக் கிடக்கிறாள்,
வட்ட மதில்களின் சாரத்தில்
சந்தோஷம் கற்றுக் கொள்கிறாள்,
வானம் குறுகியதென்று
படிக்கக் கற்றுக் கொண்டவளிடம்,
ஆர்ப்பரித்தல் கோபமென்று சொல்லிக் கொடுக்கப் பட்டது,
இறக்கைகளை மடித்துக் கொண்டவள்
நடப்பதும் பாவமென்று நினைக்கிறாள்,
தீவுக்குள் திட்டாக மாறியவளை
மீண்டும்
கடலாக யார்தான் விரிக்கப் போகிறார்கள் ?
அந்தத் திட்டிற்குள் நீர் அருந்துபவர்களே...
அந்தக் கடல்
உன் தாயாக இருக்கலாம்,
உன் தமக்கையாக இருக்கலாம்
ஏன், உன் தாரமாகவும் கூட இருக்கலாம் ,
கடலில் நீந்த வேண்டியவர்கள் நாம்,
இப்போது குட்டையில்தான்
மீன் பிடித்துக் கொண்டிருக்கிறோம்.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment