நாமக்கல் கல்வி முறை...
படித்ததைத் தவிர
வேறொன்றும் தெரியவில்லை..
பிராய்லர் கோழியாய்
போட்டத் தீனியை பொறுக்குகிறான்,

இயந்திர மனிதனாய்
பிள்ளையை மாற்றுவதற்கு
லட்சங்களைக் கொட்டியாகிவிட்டது,
ஆங்கிலத்தில்
அழகாகத்தான் பேசுகிறான்...
நெல்மணிகள்
மரத்தில்தான் காய்க்குமென்று,
கொடுமையில் கொடுமை
நிலத்தை விற்றுதான்
அப்பன்
அவனைப் படிக்க வைத்தானாம்...
நல்ல நிலத்தை , தரிசாக்கும் கதை
இங்கு மட்டும்தான்
எப்போதும் நடக்கும்!
-மு.முகமது பாட்சா
படித்ததைத் தவிர
வேறொன்றும் தெரியவில்லை..
பிராய்லர் கோழியாய்
போட்டத் தீனியை பொறுக்குகிறான்,
இயந்திர மனிதனாய்
பிள்ளையை மாற்றுவதற்கு
லட்சங்களைக் கொட்டியாகிவிட்டது,
ஆங்கிலத்தில்
அழகாகத்தான் பேசுகிறான்...
நெல்மணிகள்
மரத்தில்தான் காய்க்குமென்று,
கொடுமையில் கொடுமை
நிலத்தை விற்றுதான்
அப்பன்
அவனைப் படிக்க வைத்தானாம்...
நல்ல நிலத்தை , தரிசாக்கும் கதை
இங்கு மட்டும்தான்
எப்போதும் நடக்கும்!
-மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment