Friday, 5 May 2017

அவளின் கோப்பை

நான் உபயோகிக்கும் 
இந்தத் தேநீர் கோப்பையில் 
அவளின் ஸ்பரிசங்கள் 

உட்கார்ந்திருக்கின்றன 
அவளின் மூச்சுக் காற்று 
அதற்குள் நுழைந்து 
ஆவியாக வெளியேறியதை 
பார்த்திருக்கிறேன் 

அவள் விரல் பிடிக்கும் அழகில் 
நான் கோப்பையின் பிடியானதுண்டு 
கோப்பையினோரத்தில் 


இதழ் பொருத்தி , நிறுத்தி 
மெல்ல விலக்கி 
கண்களை மூடி 

drink tea க்கான பட முடிவு
தொண்டைக்குள் அனுப்புமழகில் 
நான் மிடறியதுண்டு... 
அவள் இல்லாத நேரங்களில் 
கோப்பையுடன்தான் 
பேசிக் கொண்டிருக்கிறேன் 
அஃதுதான் அவளின் முத்தத்தை 
இடம் மாற்றி வைக்கிறது 

கோப்பையை யாரும் 
உடைத்துவிடாதீர்கள் 
அஃதொன்றாவது என்னிடம் 
தினம் பேசிக் கொண்டிருக்கட்டும் ! 

மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts