Sunday, 7 May 2017

திருடர்கள்

என் கைகளைக் கட்டும் வரை 
பார்த்துக் கொண்டிருந்தேன் 
என் ஆடைகளைக் கழற்றிய போது 

thepting human painting க்கான பட முடிவுஅவர்களைக் கவனிக்கவில்லை 
என் நிழலை மிதித்து நின்றவர்கள் 
என்னை நிர்வாணமாக்கி 
புணர்ந்ததை உணராமல் 
வர்க்கப் போராட்டத்திற்குள் நுழைந்து 
வசனங்கள் பேசிக் கொண்டிருந்தேன் 

ஆதாரோடு களவாடப்பட்டதை அறியாமல் 
பகுத்தறிவுப் பேசியவன் 
பாழும் கிணற்றுக்குள் மெல்ல நழுவுகிறேன் 
சாதியத் தூர்களில் சிக்கி சீரழியும் முன்பாக 
ஓர் ஒற்றை வார்த்தைப் பிடித்து 
ஏறிவரவேண்டும் 
                                               புரட்சி 

-மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts