Sunday, 21 May 2017

காணாமல்போனக் கல்வி

கல்வி என்பது
காணாமல் போய்விட்டது!
யார் அதை..
கண்டுபிடிப்பது?

வியாபாரப் பொருளாக
விலை
வைத்தாகிவிட்டது,

காசை பிடுங்கும்
கூட்டத்திடம்
வசமாய் மாட்டிக் கொண்டது

அரசுப் பள்ளிகள்
அனாதை இல்லங்களாயின

வீணை வைத்திருந்த
கலை மகளின் கைகளில்
விலங்கை மாட்டி விட்டு;
சரஸ்வதிக்கு
பூசை செய்கிறார்கள்,

அறிவை சுமக்க வேண்டிய
குழந்தைகளின் முதுகில்
புத்தகச் சுமைகள்

கல்விக் கூடங்களின்
அருகில்தான்
மதுக் கடைகளின் ராஜ்ஜியம்

கண்ணீர் வடிக்கிறாள்
கலை மகள்...
காணாமல் போன கல்வியை
யார் கண்டுபிடிப்பதென்று !

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts