ஜோதி நிர்பயா ஆகிறாள்
ஜிஷா மட்டும் ஜிஷாவாகவே!
சாதிய விழுமியங்களைத் தாண்டி
சாத்தானின் ரூபகர்கள்... !
பெண்ணியம் தூங்கிக் கிடக்கிறது
பிறப்பிடப் படிமம் பார்த்து!

வழக்குகளும் விசாரணைகளும்
ஒப்பனைப் பூச்சில் ஒளிந்து கொள்கின்றன!
காமப் பேய்களின் யாக குண்டங்களாய்
பெண் உறுப்புகளில் யாகம் வளர்த்து!
'ச்சேய்!' 'ச்சீய்!' யென்று துப்பினாலும்
சாத்திரம் ஓதச் சாத்தான்கள் தயாராக!
முலையறுத்து முகர்ந்து போன
மூத்திரத்தின் பிறப்புகளே....
முடங்கிக் கிடப்பது முடியாமல்
படுத்துக் கிடக்க அல்ல
முட்டுவதற்காகவும் இருக்கலாம்!
- மு.முகமது பாட்சா
ஜிஷா மட்டும் ஜிஷாவாகவே!
சாதிய விழுமியங்களைத் தாண்டி
சாத்தானின் ரூபகர்கள்... !
பெண்ணியம் தூங்கிக் கிடக்கிறது
பிறப்பிடப் படிமம் பார்த்து!
வழக்குகளும் விசாரணைகளும்
ஒப்பனைப் பூச்சில் ஒளிந்து கொள்கின்றன!
காமப் பேய்களின் யாக குண்டங்களாய்
பெண் உறுப்புகளில் யாகம் வளர்த்து!
'ச்சேய்!' 'ச்சீய்!' யென்று துப்பினாலும்
சாத்திரம் ஓதச் சாத்தான்கள் தயாராக!
முலையறுத்து முகர்ந்து போன
மூத்திரத்தின் பிறப்புகளே....
முடங்கிக் கிடப்பது முடியாமல்
படுத்துக் கிடக்க அல்ல
முட்டுவதற்காகவும் இருக்கலாம்!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment