Monday, 8 May 2017

நாங்கள் அப்படிதான் !

நாங்கள் ஒரு கூட்டமாகவே 
வாழ்ந்து கொண்டிருக்கிறோம், 
எங்களின் நிர்வாணத்தை யாரும் 
பார்த்துவிடக் கூடாதென்பதற்காகவே 
ஆடைகளைக் களைந்து விட்டோம், 
எங்களை 
ஆடுகளென்று சொல்லிக் கொள்பவர்கள் 
சொல்லிக் கொள்ளட்டும் , 
நாங்கள் கொடிப் பிடிப்பதற்காக ஒரு தலைவனும் 
கோசம் போடுவதற்காக 
சில கூட்டங்களும் தேவைப் படுகிறது, 

indian slaves photos க்கான பட முடிவு
ஆதிவம்ச அடிமைத் தொழிலை 
எப்படிதான் எளிதில் மறக்க முடியும் ? 


குனிந்தே கிடந்தவர்களுக்கு நிமிர்ந்தால் 
முதுகு வலிக்கத்தான் செய்கிறது, 
தவறிக் கைகளை உயர்த்திவிட்டாலும் 
'வாழ்க!' கோசம்தான் வாய்கள் மொழிகின்றன, 
எங்களையே திருடிச் சென்றாலும் 
ஏனென்று நாங்கள் கேட்க மாட்டோம், 
ஏனென்றால் 
நாங்கள் அத்துணை நல்லவர்களென்று 
அவர்கள் எப்போதோ சொல்லிவிட்டார்கள்!

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts