தூண்டிலை வீசுகிறவன்
தூண்டிலில் சிக்கிக்கொள்கிறான்
எச்சில் பண்டங்கள்
சுகாதாரமாகிப் போகின்றது
புரிதலேயில்லாமல்
புரிதல் ஏற்படுகின்றது

அவையம் தொட்ட ஆடைகள்
அழகென்று ரசிக்கப்படுகின்றன
கழிவுகள் எல்லாம்
காட்சிப் பொருட்களாகின்றன
சிரிப்பையே வரவழைக்காத
வார்த்தைக் கோர்வைகள்
சிரிப்பென்றே
அங்கிகாரம் பெறுகின்றன
தனிமை,
தேடல்,
காண்பது..
மூன்றுமே
சுகமாக மாறிப் போகின்றது
இதுவென்ன மாயை...
தூண்டில் வீசுபவனே
தூண்டிலில் சிக்கிக் கொள்கிறான் !
- மு.முகமது பாட்சா
தூண்டிலில் சிக்கிக்கொள்கிறான்
எச்சில் பண்டங்கள்
சுகாதாரமாகிப் போகின்றது
புரிதலேயில்லாமல்
புரிதல் ஏற்படுகின்றது
அவையம் தொட்ட ஆடைகள்
அழகென்று ரசிக்கப்படுகின்றன
கழிவுகள் எல்லாம்
காட்சிப் பொருட்களாகின்றன
சிரிப்பையே வரவழைக்காத
வார்த்தைக் கோர்வைகள்
சிரிப்பென்றே
அங்கிகாரம் பெறுகின்றன
தனிமை,
தேடல்,
காண்பது..
மூன்றுமே
சுகமாக மாறிப் போகின்றது
இதுவென்ன மாயை...
தூண்டில் வீசுபவனே
தூண்டிலில் சிக்கிக் கொள்கிறான் !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment