Monday, 15 May 2017

இந்தக் கணம்


இந்தக் கணம் 
இந்தக் கணமாகவே நகர்கின்றது, 
இந்தக் கணம் - நான் 
இந்தக் கவிதையை 
எழுதிக் கொண்டிருக்கிறேன், 
இந்தக் கணம் நீங்களும் 
இந்தக் கவிதையை 
வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள், 
இந்தக் கணம் இப்போதுவரை 
நிலையானதுதான், 

tea cup hd image க்கான பட முடிவுஅடுத்தக் கணத்தைப் பற்றிய சிந்தனைகள் 
இந்தக் கணத்தைச் சாகடித்துவிடலாம், 
இதமான தேநீரின் இளம் சூட்டுடன் 
இந்தக் கணம் இந்தக் கவிதை 
தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது, 
இந்தவிடத்தில் வாசிப்பை நிறுத்தி 
கண்களை மூடி கவிதையை நுகருங்கள் 
தேநீரின் மணத்துடன் 
கவிதை உங்களை அசைக்கும், 
இல்லையென்றால் - நீங்கள் 
உங்கள் மூக்கைச் சரி செய்ய வேண்டாம், 
மனதைத்தான் 
எங்கேயோ தொலைத்து விட்டீர்கள் !

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts