Tuesday, 22 August 2017

வா

        வா

வா க்கான பட முடிவு

'வா' என்பது
ஒற்றை எழுத்தல்ல,
ஒற்றுமையின் 
பொருள் வார்த்தை,

'வா' என்ற 
வார்த்தைக்குள்தான்
வாழ்க்கை வசிக்கிறது,

'வா' என்ற 
அழைப்புகளில்.
உறவுகள்
கை கோர்த்து நிற்கின்றன,

'வா' என்பது
வாழ்க்கையின்
முதலெழுத்தாகும்,

'வா' என்பது
பூத்தொடுக்கும் 
நாரும் கூட,

'வா' வை வரவேற்றால்
வசந்தம்- 
தன் வாசல் கதவைத்
திறந்தே வைத்திருக்கும்

'வா' என்ற 
ஒற்றைச் சொல்லில்
'போ' யென்ற சொல்
புதைந்து போகிறது!

இனியாவது,
'வா' வை வரவேற்போம்
வாருங்கள்.

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts