Monday, 14 August 2017

அம்முவும் நானும்

Image may contain: 2 people

அம்முவும் நானும் 
அடிக்கடி 
விவாதங்களில் சிக்கிக் கொள்கிறோம் ! 

ஒரு முறை அவள் ஜெயிப்பாள் , 
மறு முறை நான் தோற்றுப் போவேன் ! 

கேள்விகளின் கொக்கிகளை வளைப்பதில் 
அவள் சாமர்த்திய சாலி ! 

ஒரு முறை 
தேசம் என்பது என்னவென்று கேட்டாள் , 
மக்கள் சூழ்ந்த நிலமென்றேன் , 
அப்படியென்றால் , 
உலகமென்றால் ,என்னவென்று கேட்கிறாள் ! 

காந்திதான் சுதந்திரம் வாங்கினாரா ? என்று கேட்டாள் 
ஆம் என்றேன் 
அப்படியென்றால் , நாமெல்லாம் 
இன்னமும் அடிமைகளா ? என்கிறாள் ! 
அதை நமக்குக் கொடுத்து விட்டார் என்றேன் 
அப்படியென்றால் , 
நாமெல்லாம் சோம்பேறிகளா ? என்று கேட்கிறாள் ! 

நம், தேசக் கொடிக்கு ஏன் , 
மூன்று வர்ணங்களென்றவள் , 
வர்ண ஆசிரம விதிகளில் 
மற்ற வண்ணங்கள் தீண்டப் படாதவையா ? 
என்று கேட்கிறாள், 
நான் என்ன சொல்லுவேன் ! 

சுதந்திர தினம் எதற்காக ? என்று கேட்கிறாள் , 
அடைந்த சுதந்திரத்தைப் போற்றும் நாளென்றேன் , 
சிரித்துவிட்டுக் கேட்கிறாள், 
அப்படியென்றால் 
பிரமதருக்கு ஏன் பாதுகாப்பு ? 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts