கண்களை மூடி காத்திருக்கிறோம்...

விதை நெல்லை
குருவிகள்
திருடிச் சென்றதாய்
குற்றச் சாட்டு,
வயல் வெளிகளை
யார் அபகரித்தது?
விவசாயிகளுக்கு
இலவச அரிசி,
நெசவாளிகளுக்கு
கஞ்சித் தொட்டி,
இருபத்தோராம் நூற்றாண்டில்
வளர்கிறது இந்தியா!
சிறு தொழில் செய்யும்
சின்னையா,
ஷாப்பிங்மாலில்
வேலைக்குச் சேர்ந்தார்?
மேக் இன் இந்தியா
மேட் இன் இந்தியாவை
விழுங்கி விட்டது?
தொலைவதும் தெரியாமல்
தொலைந்து
கொண்டிருக்கிறோம்,
வறுமையை மறைத்து
வல்லரசு என்கிறார்கள்,
தேவையில்லா வாக்குறுதிகள்
மாரீசனாய் எங்களை
மயக்கி வைத்திருக்கிறது!
கண்களை மூடியே
காத்திருக்கிறோம்
என்றாவது விடியும் என்ற
நம்பிக்கையில்,
பகலுக்கும், இரவுக்கும்
வித்தியாசம் தெரியாமல்!
- மு.முகமது பாட்சா

விதை நெல்லை
குருவிகள்
திருடிச் சென்றதாய்
குற்றச் சாட்டு,
வயல் வெளிகளை
யார் அபகரித்தது?
விவசாயிகளுக்கு
இலவச அரிசி,
நெசவாளிகளுக்கு
கஞ்சித் தொட்டி,
இருபத்தோராம் நூற்றாண்டில்
வளர்கிறது இந்தியா!
சிறு தொழில் செய்யும்
சின்னையா,
ஷாப்பிங்மாலில்
வேலைக்குச் சேர்ந்தார்?
மேக் இன் இந்தியா
மேட் இன் இந்தியாவை
விழுங்கி விட்டது?
தொலைவதும் தெரியாமல்
தொலைந்து
கொண்டிருக்கிறோம்,
வறுமையை மறைத்து
வல்லரசு என்கிறார்கள்,
தேவையில்லா வாக்குறுதிகள்
மாரீசனாய் எங்களை
மயக்கி வைத்திருக்கிறது!
கண்களை மூடியே
காத்திருக்கிறோம்
என்றாவது விடியும் என்ற
நம்பிக்கையில்,
பகலுக்கும், இரவுக்கும்
வித்தியாசம் தெரியாமல்!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment