Tuesday, 8 August 2017

விடிந்த பிறகு தெரியும்

விடிந்த பிறகு தெரியும்

Image may contain: cloud, sky, outdoor, nature and water

கறுப்புத் தாளொன்றில்
எனக்கான இரவுகளை 
வடிவமைக்கிறேன் ,

நட்சத்திரங்களும் , நிலவும் 
வண்ணம் பூசிக் கொள்ள 
மேகங்கள் சாம்பல் நிறத்தில் ... 

ஒற்றை மரம் 
எனக்குப் பிடித்தமாக இருக்கிறது ,
நிச்சயமாக அது 
போதி மரமாக இருக்க விரும்பவில்லை ,

இலைகளை வரைந்தவன் 
அசைவதை மனதில் வரைகிறேன் , 
சில்லென்றக் காற்று 
புழுக்கம் ஓடிப் போக நிச்சயம் தேவை , 

மரத்தின் அருகில் தளும்பிய குளம் , 
மொக்குகளாய் அல்லிப் பூக்கள் , 
ஒற்றைக் கொக்கு வெள்ளையாய் போதும் ,
விரல்களை நீரில் எழுத நீலம் தேவை .... 

இப்போது நான் தனிமையில்லை, 
பெண்களுக்கும் அனுமதியில்லை ....
ஒப்பனைச் செய்வது அத்தனை கடினம் ,

கறுப்பான பக்கம் வண்ணம் கூடி 
சிறப்பாக இயங்குகிறது,
கண்களை மூடி அயர்ந்துறங்குகிறேன்,

நான் வரையாத பாம்பொன்று 
என்னைக் கொத்திவிட்டுப் போகிறது , 
பிழைப்பதும் , இறப்பதும் 
இனி விடிந்த பிறகுதான் தெரியும் !

- மு.முகமது பாட்சா 

No comments:

Post a Comment

Popular Posts